அறிமுகம்:
இவ்வாய்வு மன்றம; தேசிய ரீதியில் வினைத்திறன் மிக்க ஆய்வாளர்களை உருவாக்கும் நோக்கத்துடனும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் ஆய்வுக் கலாச்சாரத்தை பரப்புவதற்கும்> மாணவர்கள் மத்தியில் காணப்படும் திறமைகளுக்கான களத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கிலும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தை மையg;gLj;jp பீடாதிபதி எஸ்.எம்.எம் மஸாஹிர் அவர்களின் தலைமையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக “இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட சமூகவியல் ஆய்வுகளுக்கான மாணவர் ஆய்வு மன்றம்” என்ற பெயரில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
தூரநோக்கு:
நமது நாட்டில் சிறந்த> தரமான ஆய்வுளுக்கான மையமாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஆய்வு மன்றம் தொழிற்படல்.
நோக்கம்:
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அறிவு பூர்வமாக சிந்திக்க கூடிய> புத்தாக்க திறன்மிக்க சிறந்த ஆய்வாளர்களை உருவாக்குதல்.
துணை நோக்கங்கள்:
சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியிலும் ஆய்வுகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
மாணவர்களை வாசிப்புக் கலாச்சாரத்தின் பக்கம் தூண்டுதல்.
மாணவர்கள் மத்தியில் ஆய்வு சார் திறன் விருத்தியை ஊக்குவித்தல்.
துறைசார் ஆய்வுகளுக்கு மாணவர்களை இனங்கண்டு வழிகாட்டல்.
மாணர்களுக்கு மத்தியில் ஆய்வு சார் ஆக்கங்களுக்கும், கட்டுரைகளுக்கும, பேச்சுக்களுக்கும், புத்தாக்கங்களுக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.