2012/ 2013 கல்வியாண்டு மாணவர்களால் தோற்றம் பெற்றதாகவும் மதபேதமின்றி அனைத்து மாணவர்களும் உறுப்புரிமையை மேற்கொள்ளவும் முடியும். பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பொதுவான​ நிகழ்வுகள், மாணவ​ அமைப்புகளால் ஏற்பாடு செய்து முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளின் போது தமிழ் இசை வட்டம் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க​ ஒத்துழைப்பு வழங்கும்.


தமிழ் இசை வட்டத்தின் நோக்கங்களாவன​

மாணவர்கள் மத்தியில் காணப்படும் இசைசார் நலன்களை பேணலும் மேம்படுத்தலும், பல்கலைக்கழகத்திலே சிறந்த​ இசையார்வளர்களை வெளிக்கொணரல், பல்கலைக்கழகத்திற்கு சிறந்த​ இசைக்கலைஞ்சர் மற்றும் பாடகர்களை வழங்குதல், சிறந்த​ பாடகர்களை உருவாக்கும் வகையிலான​ பயிற்சிகளை வழங்குதல், இசைக்கருவிகளை கையாள்வது தொடர்பான​ பயிற்சி, இசைக்கருவுகள் குறைபாடு ஏற்படும் போது அதனை மேலிடத்தில் சுட்டிக்காட்டி ஆவணம் செய்தல், பல்கலைக்கழகத்தில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடாத்துதல், தேவையின் நிமித்தம் பல்கலைக்கழக​ வைபவங்களை இசை நிகழ்ச்சியின் மூலம் அலங்கரித்தல், சமயம் மற்றும் கலாசார​ இசை நிகழ்ச்சிகளை நடாத்துதல், வில்லுப்பாடல்களை வழங்குதல், பக்கிப்பாடல், நாட்டார் பாடல், மேலைத்தேய​ பாடல், மெல்லிசைப்பாடல் எனும் பல​ வண்ணங்களில் இசைப்பாடல்களை வழங்குதல் மற்றும் வைபவங்கள் நாடகங்களின் போதான​ பின்னணி இசை.